சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிரதான முனையங்கள் மூலம் எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து, குதங்களில் போதுமான இருப்புக்களை பராமரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது தொடர்பாக அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வினியோகஸ்தர்களின் எரிபொருளை வாங்குவதற்கு எளிதாக்கும் வகையில், காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய வரும் 15ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக போதுமான பெற்றோலிய சேமிப்பை வைத்துக்கொள்ள அந் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM