( எஸ். சஞ்சீவன் )

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலத்தடிச்சேனை பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த தமிழ் மக்களின் காணி 31 வருடங்களின் பின் இன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.

1985 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் பாலத்தடிச்சேனை மக்களின் காணி நேற்றுவரை  இலங்கை இராணுவத்தினரின் 5 ஆவது ஆட்லெறி தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 

இக்காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் பல வருட காலமாக பல தரப்பினரிடமும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர் . இதன் பலனாக தற்போது நல்லாட்சி நிலவுகின்ற இச்சூழலில் தமது சொந்தக் காணி கிடைத்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினர் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறிவரும் நிலையில் இராணுவ தளவாடங்களை எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினர் காணியினை ஓரளவு புனரமைத்துத் தருவதற்கு காணி உரிமையாளர்களிடம் 2 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதுடன் பொமக்களையும் தமது காணிகளை துப்புரவு செய்வதற்கு அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.