வீரகேசரி வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

13 Apr, 2024 | 09:03 AM
image

வீரகேசரி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 

சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளையைச் சேர்ந்த முன்னிரவு 8.15 மணிக்கு பிறக்கிறது.

தமிழ் புதிய ஆண்டான 'குரோதி' வருடத்தில் சகல மக்களும் அனைத்து வித நன்மைகளையும் முன்னேற்றகரமான வாழ்க்கைச் சூழலையும் பெற்று, சிறப்புற வாழ இறைவனை பிரார்த்திப்போம். 

இலங்கையில் சித்திரை புத்தாண்டை தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்து தமிழ் சிங்கள புத்தாண்டாகவும் கொண்டாடி வருகின்றனர். இது ஒருமைப்பாட்டின் அடையாளமாகும். அதன் வழியே நாட்டில் மக்கள் அனைவரும் இன, மத, பேதமின்றி நல்லிணக்கத்தோடும் பெருங்குணப் பண்புகளோடும் மானுட ஒழுக்க நெறிமுறைகளோடும் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். 

நாடெங்கும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சமய சம்பிரதாயங்களை உள்ளடக்கி நடைபெறும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் பாரம்பரிய நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் அடையும் இன்பமும் களிப்பும் வாழ்நாள் முழுதும் தொடர புதிய ஆண்டு வழி சமைக்கட்டும்! 

அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு, தியோநகர் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக...

2024-05-28 09:33:27
news-image

மட்டு. வெல்லாவெளியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின்...

2024-05-28 09:15:56
news-image

பசறையில் குளவி கொட்டுக்கு இலக்கான நபர்...

2024-05-28 09:05:45
news-image

இன்றைய வானிலை 

2024-05-28 07:07:30
news-image

இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு...

2024-05-28 06:11:06
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பாரிய...

2024-05-28 06:10:04
news-image

ஆகஸ்ட் மாதத்துக்குள் அரச நிறுவனங்களை தனியார்...

2024-05-28 06:09:07
news-image

அலி சப்ரி ரஹீமுக்கும் புத்தளம் பிரதேச...

2024-05-28 06:00:41
news-image

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கிற்கு சமாதானத்தின்...

2024-05-28 02:35:28
news-image

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என...

2024-05-28 02:06:22
news-image

தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட...

2024-05-27 18:31:24
news-image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இந்திய...

2024-05-27 22:16:56