ஐக்கிய ஐரோப்பாவை உருவாக்கும் வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரோமிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியடைவதைக் கொண்டாடும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திக்கான ஒன்றிணைவுச் செயற்பாடுகளின் ஒரு அங்கமான மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி பற்றிய ஆவணக்குறும்படம் தொலைக்காட்சியில் இவ்வாரம் காண்பிக்கப்படவுள்ளது.
“வாழ்வை கட்டியெழுப்புவோம் வாழ்வாதாரங்களை மீட்போம்” எனும் தொனிப்பொருளில் இருபத்தைந்து நிமிடங்களில் இந்த ஆவணக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வசந்தம் மற்றும் டான் ஒளி தொலைக்காட்சி நாளிகைகளில் தமிழ்
மொழியில் காண்பிக்கப்படவுள்ளதுடன் ரூபாவாஹினி மற்றும் ITN தொலைக்காட்சி நாளிகைகளில் சிங்கள மொழியில் காண்பிக்கப்படவுள்ளது. மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி 60மில்லியன் யூரோக்கள் நிதி உதவியில் முன்னெடுக்கப்படுவதுடன் இந்நிகழ்ச்சித்திட்டத்தினால் செயற்படுத்தும் நடவடிக்கைகளை ஐந்து ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகளான UNDP, UNOPS, UNICEF, FAO மற்றும் ILO ஆகியவற்றுடன் உலக வங்கி குழுமத்தின் அங்கத்துவ அமைப்பான IFC முன்னெடுக்கின்றன. இந்த ஆவணக்குறும்படத்தில் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகள் மற்றும் ஐகுஊ ஆகியன இணைந்து சமூகங்களில் முன்னெடுத்திருந்த உறுதியான பங்காண்மைச் செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆவணக்குறும்படத்தின் மூலமாக மட்டக்களப்பு அம்பாறை வவுனியா அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகள் காண்பிக்கப்பட்டுள்ளதுடன் இச்சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் மற்றும் வாழ்வாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளுக்கு நிலைபேறான வகையில் வழங்கியுள்ள பங்களிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
காண்பிக்கப்படும் நேரங்கள்:
ரூபவாஹினி: மார்ச் 25இ மாலை 6.30
ITN: மார்ச் 26ரூபவ் மு.ப. 11.00
வசந்தம் TV: மார்ச் 25இ மு.ப. 9.30இ மார்ச் 26 மு.ப. 9.00
டான் TV: மார்ச் 25 மற்றும் 26 மாலை 6.00
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM