கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 இலங்கையர்கள் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைப்பு

11 Apr, 2024 | 02:08 PM
image

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டு மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 8 பேரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 6 ஆண்களும் இரண்டு பெண்களும் காணப்படுகின்றனர்.

இது குறித்து மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜானக பண்டார இது தொடர்பில் தெரிவிக்கையில், 

கடத்தப்பட்டடு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களில் 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 8 பேரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கையர்களைப் பாதுகாப்பாக  நாட்டுக்கு அனுப்ப இலங்கை தூதரகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியுள்ள ஏனைய இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அனுப்ப மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இலங்கையர்கள் அடங்கிய குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்புக்காக தாய்லாந்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மியன்மாரின் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்டு சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாதக் குழு, கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிக்க 8,000 அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரியிருந்த நிலையில் இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் கடந்த ஆண்டு அவர்களில் சுமார் 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 56 இலங்கையர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தற்போது சுமார் 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்கிசை துப்பாக்கிச் சூடு ; நால்வர்...

2025-01-16 11:49:13
news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:36:49
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

நிட்டம்புவையில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு...

2025-01-16 11:53:48
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51