பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பாதாள உலக குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 7 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் தோம்பே , அங்கொடை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வானலுவாவ மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 35 மற்றும் 36 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மட்டக்குளி , கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மட்டக்குளி மற்றும் அங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 37 மற்றும் 21 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மத்துகம , கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மத்துகம மற்றும் அத்திட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 47 மற்றும் 37 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 375 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM