(ஆர்.சேதுராமன்)
பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியிலிருந்து ஷஹீன் ஷா அப்ரிடி நீக்கப்படுவதற்கு முன்னர், அவருக்கு மேலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ஸாகா அஷ்ரப் கூறியுள்ளார்.
ஸாகா அஷ்ரப் சபைத் தலைவராக பதவி வகித்தபோது, பாபர் அஸாம் தலைமயிலான பாகிஸ்தான் அணி ஆசிய கிண்ண போட்டிகள் மற்றும் உலகக் கிண்ண போட்டிகளில் படுதோல்வியடைந்தது. அதன்பின் கடந்த நவம்பர் மாதம் மூவகை போட்டிகளுக்குமான அணித்தலைவர் பதவியிலிருந்து பாபர் அஸாம் விலகினார்.
அதையடுத்து, இருபது20 போட்டிகளுக்கான அணித்தலைவராக ஷஹீன் ஷா அப்ரிடி நிமிக்கப்பட்டார். எனினும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துடனான இருபது20 தொடரில் பாகிஸ்தான் 4:1 விகிதத்தில் தோல்வியற்றது.
இதனால், கடந்த மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக பாபர் அஸாமை மோஷின் ரஷா நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீண்டும் நியமித்தது.
இது அவசரகரமான தீர்மானம் என ஸாகா அஷ்ரப் விமர்சித்துள்ளார்.
லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஷஹீனுக்கு மேலும் அவகாசம், குறைந்தபட்சம் ஒரு வருடம், வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது அணித்தலைவராக அவரின் செயற்பாடுகளை ஆராய்ந்து தீர்மானம் மேற்கொண்டிருக்கலாம்' என்றார்.
பாபர் அஸாம் குறித்து ஸாகா அஷ்ரப் மேலும் கூறுகையில், 'தலைவர் பதவியிலிருந்து பாபரை நாம் நீக்க விரும்பினோம். ஏனெனில், அவர் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர். ஆனால், அணித்தலைவராக அவர் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதை நாம் அவதானித்தோம். எனவே பாபர் தனது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த வழிசெய்வதற்காக அவருக்கு பதிலாக நாம் ஷஹீனை தலைவராக நியமித்தோம்.
டெஸ்ட் அணித்தலைவராக நாம் பாபரை வைத்திருக்க விரும்பினோம். ஆனால், அவர் அனைத்து வகை போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார். அது அவரின் சொந்தத் தீர்மானம்.
எனினும், தற்போது பாபரை மீண்டும் அணித்தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. ஒரு பாகிஸ்தானியராக அணிக்கு நான் வாழ்த்து கூறுகிறேன்' என்றார்.
அதேவேளை 'பாகிஸ்தானின் தேசிய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பனிர்கள் 7 பேரில் ஐவர் லாகூரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மாத்திரம் கராச்சியைச் சேர்ந்தவர். இந்த கலவை தவறானது. தேசிய தேர்வுக்குழுவில் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும்' எனவும் ஸாகா அஷ்ரப் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM