மருதானை பகுதியிலுள்ள விடுதியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆண், பெண் ஒருவருடன் குறித்த விடுதியில் தங்கியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இவர் பொரளை பகுதியைச் சேரந்த 52 வயதான நபரென கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.