நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில் லுக்கிற்கான காணொளி வெளியீடு

Published By: Vishnu

11 Apr, 2024 | 02:21 AM
image

'கே ஜி எஃப்' பட புகழ் நடிகர் அவினாஷ் கதையின் நாயகனாக மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் பான் இந்திய அளவிலான புதிய திரைப்படத்திற்கு 'நாகபந்தம்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக் மற்றும் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

'டெவில் : தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜெண்ட்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகும் 'நாகபந்தம் : தி சீக்ரெட் ட்ரெஸ்ஸரர்' எனும் திரைப்படத்தில் 'கே ஜி எஃப்' புகழ் அவினாஷ் அகோரியாக நடிக்கிறார். எஸ் சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். ஃபேண்டஸி என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் மதுசூதன் ராவ் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை தேவன்ஷ் நாமா வழங்குகிறார்.

இப்படத்தின் டைட்டிலுக்கான கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. மேலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38
news-image

நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின்...

2025-01-16 17:03:46
news-image

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த விஜய் சேதுபதி...

2025-01-16 16:49:05
news-image

நடிகர் 'கெத்து' தினேஷ் நடிக்கும் 'கருப்பு...

2025-01-16 17:41:35
news-image

காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின்...

2025-01-16 16:45:44
news-image

கத்திக்குத்து தாக்குதல் ; நடிகர் சயிப்...

2025-01-16 16:49:31
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'காதி' படத்தின்...

2025-01-16 15:16:23
news-image

நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்...

2025-01-16 11:06:42
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்தின்...

2025-01-15 18:23:14
news-image

கவனம் ஈர்க்கும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'...

2025-01-15 18:18:10
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2'

2025-01-15 18:13:55