சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Published By: Vishnu

11 Apr, 2024 | 02:17 AM
image

கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி படங்களையும், தோல்வி படங்களையும் வழங்கி ஓரளவு நிலையான சந்தை மதிப்பினை கொண்ட நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'இங்க நான் தான் கிங்கு' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'குலுக்கு குலுக்கு..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இங்க நான் தான் கிங்கு' எனும் திரைப்படத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனீஸ்காந்த், மாறன், கூல் சுரேஷ், லொள்ளு சபா சுவாமிநாதன், மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் சேசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஷ்மிதா அன்பு செழியன் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மாயோனே' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற 'சோஜாவா சுத்துனவன் இப்ப ராஜா ரிங்குக்கு ஆக்கிவுட்டா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான டி. இமான் மற்றும் பின்னணி பாடகி சினிஷா ஜெயசீலன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளலிசையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33