நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும் 'வானரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Vishnu

11 Apr, 2024 | 02:01 AM
image

திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. முத்திரை பதித்த நட்சத்திரங்களின் இரண்டாம் தலைமுறை வாரிசுகளும் நட்சத்திரங்களாக அறிமுகமாவதும் இயல்பு. அந்த வகையில் உடல் மொழியாலும், நவரச பாவனைகளாலும்,  பார்வையாளர்களிடத்தில் புன்னகையை பூக்கச் செய்த மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன்- நடிகர் ஆனந்த் பாபுவின் மகனான பிஜேஷ் கதையின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் 'வானரன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வானரன்' திரைப்படத்தின் நடிகர் பிஜேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹெச். ஷாஜகான் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒரஞ்சு பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் பத்மநாபன் மற்றும் ஆர் சுஜாதா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

நாகேஷின் பேரன் கதையின் நாயகனாக நடித்திருப்பதாலும், அவர் வித்தியாசமான ஆஞ்சநேயர் வேடத்தில் தோன்றுவதாலும், 'வானரன்' படத்தை பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு திரையுலக ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33