அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்  

Published By: Vishnu

11 Apr, 2024 | 10:43 AM
image

தொகுப்பு சுபயோக தாசன்

தற்போதைய போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த சூழலில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத சவால்களை நாளாந்தம் சந்திக்கும் எம்முடைய மக்கள்... தங்கள் வளர்ச்சிக்காக ஆன்மீக பெரியோர்களையோ அல்லது ஜோதிட நிபுணர்களையோ சந்திக்கும்போது வைக்கும் முதன்மையான கோரிக்கை அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக ஏதாவது ஒரு ஆலயத்தை மட்டும் குறிப்பிடுங்கள். அதற்கு நாங்கள் சென்று வருகிறோம் என சொல்வர். இத்தகைய அன்பர்களுக்காக எம்முடைய முன்னோர்கள் சுட்டிக் காட்டி இருக்கும் தலம் தான் செந்தலை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.

 எம்முடைய குடும்ப உறுப்பினர்களின் சிலருக்கு களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் இருக்கும். இதனால் திருமண தடை ஏற்பட்டு, திருமணம் கைகூடாமல் தாமதப்பட்டு கொண்டிருக்கும். எத்தனையோ பரிகாரங்களை செய்த பிறகும் மனம் விரும்பும் திருமணம் என்பது நடைபெறாமல் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். வேறு சிலருக்கு சனி தோஷம், சுக்கிர தோஷம் என நவக்கிரக தோஷங்களும் உண்டாகி இருக்கும். வேறு சிலருக்கு குழந்தை பேறின்மையும் ஏற்பட்டிருக்கும். வேறு சிலருக்கு தொழில்களில் வளர்ச்சியோ அபிவிருத்தியோ என்பது இல்லாமல் ஒரே நிலையில் தேக்கமடைந்து இருக்கும். இப்படி எத்தனையோ தோஷங்களை பட்டியலிட்டாலும்... அத்தனை தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் தலமாக திகழ்வதுதான் இந்த செந்தலை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயம் நான்கு யுகங்களாக இருக்கிறது என்றும், 15 ஆம் நூற்றாண்டிலிருந்து தற்போது தோற்றமளிக்கும் பிரம்மாண்ட ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார் சிவபெருமான் என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள். 

சிவன் +விஷ்ணு+ பிரம்மா ஆகிய மூவரும் இங்கு தனி சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் குறிப்பாக இத்தலத்தில் இருக்கும் பஞ்சமுக சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது நிறமாற்றம் ஏற்படுவதை இன்றும் காணலாம். அதிலும் குறிப்பாக ரத சப்தமி தினத்தன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது இந்த நிறமாற்றம் ஏற்படுவதை பக்தர்கள் இன்றும் கண்கூடாக கண்டு பரவசமடைகிறார்கள். இதற்கான புராண வரலாற்றை ஆலயத்திற்கு சென்று அங்கு இறை ஊழியம் செய்யும் அன்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

 இந்த பஞ்சமுக சிவபெருமானுக்கு உங்களுடைய குடும்ப ஜோதிடரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் படி ஆலயத்திற்கு வருகை தந்து பிரத்யேக அபிஷேகமும், ஆராதனையும், விசேட அலங்காரமும் செய்து இறைவனை மனம் உருக பிரார்த்தித்தால் உங்களது தோஷம் நிவர்த்தி அடைந்து சுப பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம். 

இங்கு சிவபெருமானின் ஆலயத்தில் குரு பகவானுக்கு எதிரே சப்த கன்னிகள் வீற்றிருந்து அருள் பாலிப்பதால்.. செல்வம் சார்ந்த உங்களது கோரிக்கைகள் விரைவாக நிறைவேறுவதை அனுபவத்தில் கண்டு மகிழலாம். 

சிவபெருமானுக்கும், மீனாட்சிக்கும் அலங்காரம் செய்வித்து தரிசித்தால் திருமண பாக்கியம் கைகூடும். இங்கு அம்பாளின் பாதம் முன்னும் பின்னுமாக அமைந்திருக்கும். இது வேறு எங்கும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சியாகும். இதுவே திருமணம் சார்ந்த பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் சக்தியாகவும் திகழ்கிறது என்கிறார்கள் பக்தர்கள். அத்துடன் இங்குள்ள சப்த மாதாக்களுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பேறு, தீராத வியாதிக்கான குணம் ஆகியவை கிடைக்கிறது என்றும் இந்த சப்த மாதாவை தொடர்ச்சியாக 48 நாட்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டால் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். 

மாதந்தோறும் அமாவாசை தினம், திருவாதிரை ஆருத்ரா தரிசனம்,  ரத சப்தமி, ஆகிய நாட்களில் சுந்தரேஸ்வரரை வணங்குவது தனிச்சிறப்பு. இங்கு வீற்றிருக்கும் இறைவன் சுந்தரேஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். சுயம்புவாக தோன்றிய சிவபெருமானின் தோற்றத்தில் காலத்தால் முதன்மையானவர் என்பதால்.. இவரை முறையாக மனமுருகி வணங்கும்போது எம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுவது உறுதி.

 இத்தனை அற்புதங்கள் நிகழ்த்தும் இந்த தலத்திற்கு நீங்கள் செல்ல விரும்பினால்.. தாயகத்திலிருந்து ஆகாய மார்க்கமாக திருச்சி விமான நிலையம் வந்தடைய வேண்டும். அதன் பிறகு தஞ்சாவூர் வழியாக திருவையாறு எனும் ஊருக்கு வந்தடைந்து, அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி எனும் ஊருக்கு செல்லும் பாதையில் பயணித்து, கண்டியூர் எனும் ஊரைக் கடந்து செல்லும்போது.. அங்கிருந்து மிக அருகில் இருக்கும் செந்தலை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை வந்தடையலாம். 

உங்களின் பன்முக பிரச்சனைக்கு  பஞ்சமுக சிவபெருமானை தரிசித்தால் கோடி நன்மை கிட்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்- சிம்மம்..!?

2024-05-29 17:41:04
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் !

2024-05-28 15:12:02
news-image

வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்-...

2024-05-27 16:04:42
news-image

தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

2024-05-24 17:46:47
news-image

தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2024-05-23 17:45:36
news-image

துர் மரணங்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி,...

2024-05-21 17:19:44
news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24