பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Vishnu

10 Apr, 2024 | 10:59 PM
image

எம்மில் சிலருக்கு பிறவிலேயே அட்ரீனல் எனப்படும் சுரப்பியில் குறைபாடு உண்டாகி இருக்கும். இதனை மருத்துவ மொழியில் கான்ஜினென்டல் அட்ரீனல் ஹைபர்பிளாஸியா என குறிப்பிடுவர். இதற்கு தற்போது நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொருடைய உடலிலும் சிறுநீரகத்தின் மேல் பகுதியில் சிறிய அளவில் சுரப்பி ஒன்று இருக்கும். அதற்கு அட்ரீனல் சுரப்பி என பெயர். இந்த சுரப்பி பல்வேறு ஹோர்மோன்களையும் சுரக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி, வளர்ச்சிதை மாற்றம், அத்தியாவசிய செயல்பாடு என பல்வேறு விடயங்களில் இதனுடைய ஹோர்மோன் உதவி செய்கிறது. இத்தகைய ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாடு- செயல்பாட்டில் சிலருக்கு பிறக்கும்போதே குறைபாடு உண்டாகும்.

மரபணு குறைபாடு காரணமாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய குறைபாடு கிளாசிக் மற்றும் நான் கிளாசிக் என்று இரண்டு வகையாக ஏற்படுகிறது. கிளாசிக் வகை பாதிப்பு அரிதானது என்றும், நான் கிளாசிக் வகை பாதிப்பு 5 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கார்ட்டிசோல் ஹோர்மோன் உற்பத்தி சமசீரற்றதாக இருப்பது, கார்ட்டிசோல் ஹோர்மோன் குறைவாக சுரப்பது, ஆண்ட்ரஜன் உற்பத்தி இயல்பான அளவை விட கூடுதலாக இருப்பது, வளர்ச்சியில் சமசீரற்ற தன்மை, மகப்பேறு குறைபாடு.. போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கிறது.  நான் கிளாசிக் எனப்படும் பாதிப்பிற்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சி, கருத்தரித்தலில் பிரச்சனை, முகத்தில் விரும்பத்தகாத முடி வளர்ச்சி, குரலில் மாற்றம், மிக சிறிய வயதில் பூப்பெய்தல், கடுமையான முகப்பரு போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கிறது.

இதற்கு குழந்தை பிறப்பிற்கு முன்னதாகவே பெண்மணிகளுக்கு பிரத்யேக பரிசோதனை நடைபெறும். அதிலும் குறிப்பாக கரு தரித்திருக்கும் காலகட்டத்தில் சில மரபணு சோதனை மற்றும் பிரத்யேக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனையும் நடைபெறும்.  இத்தகைய பாதிப்பு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு உடல் ரீதியான பரிசோதனை, குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் மரபணு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய் நிபுணர்- உளவியல் மருத்துவ நிபுணர் - எண்டோகிரைன் எனும் நாளமில்லா சுரப்பிக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்- மரபணு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஆகிய குழுவினர் இணைந்து சிகிச்சைகளை தீர்மானிப்பர்.

முதலில் நவீன தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட மருந்துகள் சிகிச்சைகள் மூலம் கார்ட்டிசோல் எனும் ஹோர்மோன் உற்பத்தியை சீராக்கி, நிவாரணம் வழங்குவர். வேறு சிலருக்கு உப்புச்சத்து உள்ளிட்ட சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான பிரத்யேக சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிப்பர். வெகு சிலருக்கு மட்டும் ரீகன்சன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜேரி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர். மேலும் இத்தகைய பிறவி குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுள் முழுவதும் பாதிப்பை எதிர்கொள்வதற்கான உளவியல் சிகிச்சைகளையும் வழங்குவர்.

டொக்டர் துர்கா தேவி, தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07
news-image

சுருள் சிரை நரம்பு பாதிப்பிற்கு நிவாரணம்...

2024-05-14 20:55:21
news-image

உணவு குழாய் இயக்க பாதிப்பை துல்லியமாக...

2024-05-13 17:42:00
news-image

'கொரியா' தசை இயக்கப் பாதிப்பை கட்டுப்படுத்தும்...

2024-05-11 18:10:10