லங்கா பிறீமியர் லீக்கில் வெளிநாட்டு வீரர்களைப் பதிவு செய்வது ஆரம்பம்

Published By: Vishnu

10 Apr, 2024 | 06:01 PM
image

(நெவில் அன்தனி)

லங்கா பிறீமியர் லீக்கின் ஐந்தாவது அத்தியாயத்தை முன்னிட்டு வெளிநாட்டு வீரர்களைப் பதிவுசெய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வருட லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் https://srilankacricket.lk/lpl-playerregistration-portal/ என்ற இணை முகப்பில் தங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம். இதில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது. ஒன்று தேசிய வீரர்களுக்கான பதிவு. மற்றையது தேசிய வீரர்கள் அல்லாதவர்களுக்கான பதிவு.

டெஸ்ட் கிரிக்கெட், சர்வதேச ஒருநாள் அல்லது சர்வதேச ரி20 கிரிக்கெட் ஆகியவற்றில் குறைந்த பட்சம் ஒரு போட்டியில் விளையாடியவர்கள் தேசிய வீரர்களாக கருதப்படுவர்.

தேசிய அணியில் இடம்பெறாமல் முதலாம் தர கிரிக்கெட் அல்லது தொழில்முறை ரி20 கிரிக்கெட் ஆகியவற்றில் விளையாடியவர்கள் தேசிய வீரர்கள் அல்லாதவர்களாக கருதப்படுவர்.

இதேவேளை,  சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அங்கத்துவம் உடைய அல்லது இணை அங்கத்துவம் உடைய நாடுகளால் நடத்தப்படும் தொழில்சார் ரி20 போட்டிகளில் விளையாடி வரும் முன்னாள் இலங்கை வீரர்களைப் பதிவு செய்வதற்கு பிரிதொரு இணைய முகப்பு இருக்கிறது.

அத்தகை வீரர்கள்  https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ என்ற இணைய முகப்பில் தங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம்.

சர்வதேச வீரர்களின் பங்கேற்புடன் இலங்கையில் நடத்தப்படும் அதி உயரிய உள்ளூர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியான லங்கா பிறீமியர் லீக்கின் 5ஆவது அத்தியாயம் ஜூலை 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 21ஆம் திகதி நிறைவடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26