மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் டி.டிம்.எஸ்.படகொடவை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று (22) பிறப்பித்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குணரத்ன சொத்து விபரத்தை வெளிப்படுத்தாமை தொடர்பிலான இரண்டு வழக்குகளின் முதல் சாட்சியாளரான டி.டிம்.எஸ்.படகொட நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தால் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சரத் குணரத்னவுக்கு எதிராக தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.