எப்பாவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரலோகம, மீகஸ்ஸேகம பகுதியில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த இனந்தெரியாத நபரொருவர் தொடர்பில் அடையாளம் காண எப்பாவல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
உயிரிழந்தவர் கூலி தொழிலுக்காக எப்பாவல பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும், இதன்போது இவர் சுகயீனமடைந்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலத்திற்கு அருகிலிருந்து வைத்தியசாலையின் மருத்துவ புத்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இவரது பெயர் டபிள்யூ.ஏ சன்னி எனவும் இவர் 82 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது உடலில் மார்பு பகுதியில் இறக்கைகளை விரித்த நிலையில் ஒரு பறவையின் உருவம் பச்சை குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 025-2249122 என்ற எப்பாவல பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM