கண்டி நகரில் உள்ள உணவகங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் மனித பாவனைக்கு உதவாத மற்றும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வைத்திருந்த 12 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 55 உணவகங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் விற்பனைக்காகவும் உணவுத் தயாரிப்புக்காகவும் வைக்கப்பட்டிருந்த 500 கிலோ மனித பாவனைக்கு உதவாத கிழங்கு, வெங்காயம் , கத்தரிக்காய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, முறையாக களஞ்சியப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த வெண்ணெய் மற்றும் சொசேஜஸ் தொகையை அழிக்க பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த மூடைகளினுள் எலிகள் காணப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மற்றுமொரு உணவகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கொத்து தயாரிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த ரொட்டி துண்டுகள் மேசை துடைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட துணியால் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM