தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகராகவும், தயாரிப்பாளருக்கு குறைந்தபட்ச லாபத்தை வழங்கும் நடிகராகவும் வலம் வரும் விதார்த், கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' எனும் திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரவீண் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் விதார்த் காவல்துறை அதிகாரியாக தோன்றுகிறார். அவரின் பின்னணியில் வரையப்பட்டிருக்கும் உருவம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.
'லாந்தர்' என்பது மின்சார வசதி இல்லாத காலகட்டத்தில் இரவு நேர பயணத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு விளக்கு என்பதும், தற்போது இவை பயன்பாட்டில் இல்லை என்றாலும்.. இதனை மையப்படுத்தி பீரியாடிக் ஃபிலிமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என அவதானிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM