இந்தி திரையுலகில் விளையாட்டு துறை தொடர்பான சுயசரிதை சார்ந்த படைப்புகளுக்கு வரவேற்பு அதிகம். 'மேரி கோம்', 'டோனி -அன்டோல்ட் ஸ்டோரி', 'சூர்மா', 'தங்கல்', '83' என ஏராளமான படைப்புகளை பட்டியலிடலாம்.
அந்த வகையில் இந்திய அணியின் உதை பந்தாட்ட பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீம் என்பவரின் வாழ்க்கை வரலாறைத் தழுவி 'மைதான்' எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்தத் திரைப்படம் ரமழான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இந்தியில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
இயக்குநர் அமித் ரவீந்திரநாத் சர்மா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மைதான்' திரைப்படத்தில் அஜய் தேவ்கன், பிரியா மணி, கஜராஜ் ராவ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
துஷார் கான்டிரே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பயோபிக் திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பே வ்யூ ப்ராஜெக்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜய் தேவகன் கதையின் நாயகனாக நடித்திருப்பதாலும், உதைப்பந்தாட்டம் தொடர்பான திரைப்படம் என்பதாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM