'தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்' என்ற முதுமொழியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'வல்லவன் வகுத்ததடா' திரைப்படம் ஏப்ரல் பதினோராம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது.
ஏராளமான திரைப்படங்கள் வெளியாகும் இந்த தருணத்தில் 'வல்லவன் வகுத்ததடா' தப்பி பிழைக்குமா..? என்பது ரசிகர்களின் கையில் இருக்கிறது.
அறிமுக இயக்குநர் விநாயக் துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வல்லவன் வகுத்ததடா' எனும் திரைப்படத்தில் தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஜிஸ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார். ஹைபர் லிங்க் பாணியிலான இந்தத் திரைப்படத்தை ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் விநாயக் துரை தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' படத்தில் ஐந்து கதாபாத்திரங்கள் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பண தேவை உள்ளது.
இந்நிலையில் இவர்களிடத்தில் எதிர்பாராதவிதமாக கோடிக்கணக்கிலான பணம் கிடைக்கிறது. இதனை யார் கைப்பற்றி திறம்பட கையாள்கிறார்கள் என்பதுதான் படத்தின் சுவாரசியமான அம்சம்.
தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும் என்பதை மையப்படுத்தி இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பணத்திற்கு பின்னால் அலையும் மனிதர்களின் கதை என்பதால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.'' என்றார்.
சிறு முதலீட்டில் உருவாகி இருக்கும் இந்த 'வல்லவன் வகுத்ததடா' எனும் திரைப்படம் கேட்சியான டைட்டிலை கொண்டிருப்பதாலும், முற்றிலும் புதுமுகங்கள் என்பதாலும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என அவதானிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM