மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் ஆரம்ப நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் செவ்வாய்க்கிழமை (09) மாலை ஆரம்பித்துவைத்தார்.
ஆரம்பத்தில் பிரதம விருந்தினர் அழைப்பின்போது தமிழர் கலாசார நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து, நிகழ்வின் முதற்கட்டமாக பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
அத்தோடு, கிழக்கு மாகாண ஆளுநரின் சேவையினை பாராட்டி நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினரால் ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கழகத்தினால் மரதன் ஓட்டம், படகோட்டம், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், சைக்கிளோட்டம், சங்கீத கதிரை, முட்டி உடைத்தல், பலூன் உடைத்தல், மிட்டாய் உண்ணுதல், நீச்சல் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM