பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 9 பேர் கைது!

10 Apr, 2024 | 11:23 AM
image

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட  விசேட குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (9) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மோதரை, மொரட்டுவை , மீகொடை , அங்கொடை , அதுருகிரிய மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மோதரை, மொரட்டுவை , மீகொடை , அங்கொடை , அதுருகிரிய மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23,35, 65, 26, 30 , 43 மற்றும் 41  வயதுடைய ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் பொரலஸ்கமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெல்லந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மிட்டியாகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மிட்டியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 363 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48
news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2026-02-18 13:05:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-18 12:48:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...

2026-02-18 13:05:31
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS...

2026-02-18 12:25:28
news-image

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

2026-02-18 12:15:59