சிறிய முதலீட்டில் தயாராகி, பட மாளிகையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற பிறகு, குறுகிய கால அவகாசத்திற்குள் அத்திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது தற்போதைய ட்ரெண்டிங். டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை கோடி கணக்கில் இருப்பதால் அவர்களை வாரம் தோறும் திருப்திப்படுத்த புதிய திரைப்படங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் டிஜிட்டல் தள நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அந்த வகையில் உலகம் முழுவதும் ஏராளமான தமிழ் ரசிகர்களை சந்தாதாரராக கொண்டிருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் தென்னிந்திய ரசிகர்களை மகிழ்வித்த 'பிரேமலு' படம் வெளியாகிறது. ஏப்ரல் 12ஆம் திகதியன்று இந்த திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏ.டி. கிரீஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் நஸ்லென் கே கபூர், மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், அகிலா பார்க்கவன், ஷ்யாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அல்தாப் சலீம், சமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார்.
ரொமான்டிக் காமெடி ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் எந்தவித தணிக்கையும் இல்லாமல் ரசிக்கலாம் என்பதே இதன் தனி சிறப்பம்சம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM