சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும் ஊட்டத்தூர் ஸ்ரீ சுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம்

Published By: Digital Desk 7

09 Apr, 2024 | 05:37 PM
image

எம்முடைய முன்னோர்கள் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை களைவதற்காக சூட்சமமான முறையில் பலனளிக்கும் ஆலயங்களை உருவாக்கினர்.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விசேட அம்சங்கள் இருப்பதை காண்கிறோம். ஆசிய கண்டத்திலேயே எங்கும் இல்லாத மிக அபூர்வமான பஞ்ச நதன பாறையில் சுயம்புவாய் எழுந்தருளும் ஊட்டத்தூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத சுத்த ரத்தினேஸ்வரர் ஆலயத்திற்கு ஒரு முறை விஜயம் செய்து இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த ஆலயத்தின் சிறப்புகளை பல்வேறு இணையதள கட்டுரைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆனாலும் அங்குள்ள மக்களின் நம்பிக்கை என்பது வித்தியாசமாக உள்ளது. சிறுநீரக கோளாறுகள் ஏதேனும் வந்தால் அதனை குணப்படுத்த இங்குள்ள ஆலயத்தில் பஞ்ச நதன பாறையில் உருவாக்கப்பட்டிருக்கும் நடராஜர் பெருமான் சிலைக்கு விசேட அபிஷேகமும், ஆராதனையும் செய்து அதனை முறைப்படி பருகி வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமடைகிறது என்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இங்குள்ள நடராஜ பெருமான் சிலைக்கு மக்கள் அபிஷேகம் ஆராதனை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பஞ்ச நதன பாறையில் உறைந்திருக்கும் நடராஜப் பெருமான் ஒன்பது வகையான அபிஷேகங்களுக்கு பிறகு தான் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.‌ இந்த அதிசயத்தை இன்றும் நாம் இந்த ஆலயத்தில் காணலாம்.

இங்குள்ள கொடிமரம் விசேடமானது இந்த கொடிமரத்தில் மேற்பகுதியில் 27 நட்சத்திரங்கள் 15 திதிகள் நவகிரகங்கள் ஆகியவை பதியமிடப்பட்டிருக்கின்றன. அதனால் பக்தர்கள் தங்களது கோரிக்கையை இந்த கொடி மரத்தின் முன் சமர்ப்பிக்கின்றனர். அதன் பிறகு இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அல்லது தலையில் தண்ணீரை தெளித்துக் கொண்டு இறைவனை காண்கிறார்கள். இங்கு இறைவனுக்கு வெட்டிவேர் எனும் மூலிகையை சாற்றி வழிபடுகிறார்கள். பக்தர்கள் இந்த வெட்டிவேர் எனும் மூலிகையை பிரசாதமாக பெற்றுக்கொண்டு, பிரம்ம தீர்த்தத்தில் ஆலய நிர்வாகிகளின் அனுமதி பெற்று ஒரு போத்தல் நீரையும் சேகரித்துக் கொள்கிறார்கள். இறைவனை தரிசனம் செய்த பிறகு வெட்டி வேரையும், இந்த பிரம்ம தீர்த்தத்தையும் நாளாந்தம் சாப்பிட்டு வந்தால்  சிறுநீரக கோளாறு பாதிப்பு ஆகியவை முழுமையாக நீங்குகிறது என்கிறார்கள்.

சிறுநீரக கோளாறு என்பது மட்டும் இல்லாமல் உங்களுடைய உடலில் ஏற்படும் அனைத்து வகையான குறைபாடுகளையும் இங்கு முறையாக வழிபடும்போது முழுமையான நிவாரணம் கிடைக்கின்றன என்றும் மக்கள் தெரிவிக்கிறார்கள். அத்துடன் திருமண தடையால் அவதியுறும் பெண்களும், ஆண்களும் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து அகிலாண்டேஸ்வரி மற்றும் சுத்த ரத்தினேஸ்வரரை வணங்கி முறையாக பிரார்த்தித்தால் திருமணம் கைகூடும் என்றும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த ஊட்டத்தூர் சிவாலயம் சர்வதேச பயணிகளை கவர்வதற்கு பிரதான காரணம் இங்குள்ள பஞ்ச நதன பாறையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் நடராஜ பெருமான் தான். இதனை காண்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து ஏராளமான இலங்கையர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

தாயகத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஆகாய மார்க்கமாக பயணித்து, திருச்சி வந்திறங்கி, அதன் பிறகு திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பயணித்து, பாடலூர் எனும் ஊரை கடந்து செல்லும்போது அங்கிருந்து கிளைச்சாலையாக செல்லும் பாதையில் நான்கு கிலோமீற்றர் பயணித்தால் ஊட்டத்தூர் சிவாலயத்திற்கு சென்றடையலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்- சிம்மம்..!?

2024-05-29 17:41:04
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் !

2024-05-28 15:12:02
news-image

வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்-...

2024-05-27 16:04:42
news-image

தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

2024-05-24 17:46:47
news-image

தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2024-05-23 17:45:36
news-image

துர் மரணங்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி,...

2024-05-21 17:19:44
news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24