ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

09 Apr, 2024 | 05:25 PM
image

ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு ரூமாட்டிக் காய்ச்சல் வரக்கூடும். இத்தகைய காய்ச்சல் வந்து குணமடைந்த பிறகு சிலருக்கு இதனுடைய பக்க விளைவாக இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதற்கு மருத்துவ மொழியில் ரூமாடிக் ஹார்ட் டிசிஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதயத்தின் உள்ள வால்வுகளில் சேதத்தை ஏற்படுத்தும் ரூமாட்டிக் ஹார்ட் டிஸீஸை சரியான தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.  ஸ்ட்ரொப்டோகாக்கல் தொற்று பாதிப்பு தொண்டையில் ஏற்படுவதுடன் உறுப்பு சேதத்தையும் ஏற்படுத்தும். இவையே இதய வால்வுகளில் சேதத்தை ஏற்படுத்துவதுடன் இதய செயலிழப்பையும் உண்டாக்கும்.

சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இத்தகைய நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.  வேறு சிலருக்கு காய்ச்சல், வீக்கம், சுவாசப் பிரச்சனை, மூச்சுத் திணறல், மார்பு பகுதியில் வலி, மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு, அதீத சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் எக்கோ கார்டியோகிராம், மார்பக எக்ஸ்ரே, எலக்ட்ரோ கார்டியோகிராம் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். பாதிப்பின் தன்மையை பொறுத்து சிகிச்சைகளை தீர்மானிப்பர். இதற்கு நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிப்பர். வெகு சிலருக்கு இதயத்தில் உள்ள வால்வுகளில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை சீராக்க பலூன் சத்திர சிகிச்சையை மேற்கொள்வர்.

ஐந்து முதல் பதினைந்து வயது வரை உள்ளவர்களுக்கு ரூமாடிக் காய்ச்சல் ஏற்பட்டால்  அதன் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும். மேலும் ரூமாடிக் காய்ச்சலால் இதய பகுதி பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவர்களின் அறிவுரையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் இதன் போது புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். சத்துள்ள சரி சம விகித உணவு முறையை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். மது அருந்தும் பழக்கத்தை முற்றாக தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் எப்பொழுதும் உற்சாகமான மனநிலையுடன் இருக்க வேண்டும்.

இதனை முழுமையாக பின்பற்றினால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இயலும். கடைப்பிடிக்க தவறினால் இதய பாதிப்பு ஏற்பட்டு, இதற்கு பத்து ஆண்டுகள் முதல் பதினைந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

டொக்டர் முத்துகுமரன்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07
news-image

சுருள் சிரை நரம்பு பாதிப்பிற்கு நிவாரணம்...

2024-05-14 20:55:21
news-image

உணவு குழாய் இயக்க பாதிப்பை துல்லியமாக...

2024-05-13 17:42:00
news-image

'கொரியா' தசை இயக்கப் பாதிப்பை கட்டுப்படுத்தும்...

2024-05-11 18:10:10