(எம்.மனோசித்ரா)
'அனைவருக்கும் ஆங்கிலம்' வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆங்கில மொழியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்கான பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 4441 ஆக இருப்பினும், அதற்காக 6500 ஆசிரியர்களின் தேவை காணப்படுகிறது.
பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் திட்டமிட்டு, ஆங்கில மொழி மூலமான கற்பித்தல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளமை, 765 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளின் எண்ணிக்கையை, 2024ஆம் ஆண்டில் 1000 பாடசாலைகளாக அதிகரித்து ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6500 வரைக்கும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களைக் கற்பிக்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் ஜனாதிபதியும் கல்வி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM