மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
திங்கட்கிழமை (08 ) தனிமையில் இருந்து தனது வீட்டில் வெல்டிங் - இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்ததாகவும் பின்னர் தனது சகோதரி மற்றும் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களின் பணிப்புக்கமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர். பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்குட்டடுத்துமாறு சட்ட வைத்தியரை பணித்திருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் இன்று செவ்வாய்கிழமை (09) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM