(எம்.மனோசித்ரா)
அரசுக்கு உரித்தான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளில் நிலவும் பலவீனங்கள் காரணமாக கடந்த காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலையில் குறித்த வங்கிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தன.
எனவே அவ்வாறான சிரமங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவ்வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய பல மறுசீரமைப்புகள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவினால் அடையாளங் காணப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதிகள் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கும் கட்டமைப்பு ரீதியான தேவைப்பாடுகளாகவும், உலக வங்கியினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி கொள்கை செயற்பாடுகளின் கீழான அடிப்படைச் செயற்பாடுகளாகவும் குறித்த மறுசீரமைப்புகளை துரிதமாக அமுல்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கமைய குறித்த மறுசீரமைப்பு யோசனைகளை அமுல்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM