கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவை 

09 Apr, 2024 | 03:30 PM
image

சிக்கனமான கட்டணங்களுடன் இலங்கையில் விமான சேவைகளை வழங்கி வருகின்ற FitsAir, 2024 ஏப்ரல் முதல் கொழும்பு மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையில் மலிவான பிரயாணத் தெரிவுகளுக்கு அதிகரித்து வருகின்ற கேள்விக்கான ஒரு தீர்வாக, பிராந்திய விமான சேவையில் இது முக்கியமானதொரு சாதனை இலக்காக மாறியுள்ளது. 

பங்களாதேஷின் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் அங்கு செயல்பாடுகளை முன்னெடுப்பதில் கணிசமான அளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளமையால், டாக்கா மிகவும் பிரபலமாக மாறி வருகின்றது.

இப்போக்கினை இனங்கண்டு, அதற்கேற்றவாறு, வளர்ச்சி கண்டு வருகின்ற இச்சந்தையின் தேவைகளை ஈடுசெய்வதற்கு, மலிவான, குறித்த நேரத்திற்கு இயங்குகின்ற மற்றும் திறன் மிக்க விமான சேவையை வழங்குவதில் FitsAir அர்ப்பணிப்புடன் உள்ளது.  

FitsAir இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அமார் காசிம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “உலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற பொருளாதாரங்களில் ஒன்றாக பங்களாதேஷ் காணப்படுவதுடன், அங்கு வர்த்தக நோக்கங்களுக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் பிரயாணம் செய்கின்றவர்களுக்கு சிக்கனமான கடடணங்களுடன் சேவைகளை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். டாக்காவுக்கான எமது நேரடி சேவையானது இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்,” என்று குறிப்பிட்டார். 

புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள இந்த மார்க்கமானது வாரத்திற்கு இரு தடவை என்ற அடிப்படையில் சேவைகள் இடம்பெறுவதுடன், கோடை காலத்தில் இச்சேவைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் (இதற்கான அங்கீகாரம் பரிசீலனையில் உள்ளது) எதிர்பார்க்கப்படுகின்றது. டாக்காவிலிருந்து கொழும்பிற்கு பறந்து, அதன் பின்னர் மாலே, சென்னை மற்றும் டுபாய் ஆகிய இடங்களுக்கான உடனடி இணைப்பு விமான சேவைகளைப் பெற பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் விமான சேவை நேரங்களை மிகவும் திட்டமிட்டு FitsAirஏற்பாடு செய்துள்ளது. மேலும், வர்த்தகத் தேவைகளுக்காக பிரயாணம் செய்கின்றவர்கள் தமது தேவைகளை திறம்பட நிறைவேற்றிக் கொள்வதற்கு பிரத்தியேக சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

2024 ஏப்ரல் 16 முதல் இச்சேவைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், ரூபா 74,600 என்ற கவர்ச்சியான ஆரம்ப சலுகைக் கட்டணமாக வழங்கவுள்ளது. டாக்காவுக்கு புறம்பாக, தனது சேவை மையமான கொழும்பிலிருந்து டுபாய், மாலே மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கும் நேரடி விமான சேவைகளை FitsAir  தற்போது வழங்கி வருகின்றது.    

சேவைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள www.fitsair.com என்ற FitsAir இன் இணையத்தளத்திலோ அல்லது ((+94) 117 940 940  என்ற பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை இலக்கத்தினூடாக சேவை அணியைத் தொடர்பு கொண்டோ அல்லது ((+94) 777 811 118 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை தொடர்பு கொண்டோ அறிந்து கொள்ள முடியும்.     

FitsAir தொடர்பான விபரங்கள்

சரக்கு விமான சேவைகளுடன் 1997 இல் FitsAir  இயங்க ஆரம்பித்தது. FitsAir  ஆனது விமான சேவைகள் துறையில் பல தசாப்த கால அனுபவம் மற்றும் பல்லாயிரக்கணக்கில் பறந்துள்ள விமானங்கள் ஆகியவற்றின் மத்தியில் இலங்கைக்கு வெளியில் திட்டமிடப்பட்ட சர்வதேச பிரயாணிகள் விமான சேவையை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள முதலாவது தனியார் விமான சேவையாகும். இவ்விமான சேவையானது அதிநவீன யு320 விமானங்கள் தொகுதியைக் கொண்டுள்ளது. எல்லாவற்றையும் விட பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிக்கும் FitsAir , அதன் உயர் தர சேவையையிட்டு பெருமை கொள்கின்றது. இலங்கையில் பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குழுமமான Aberdeen Holdings இன் அங்கமாக FitsAir செயல்பட்டு வருகின்றது.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் புதிய தவிசாளராக...

2025-02-11 18:03:15
news-image

MMBL மணி ட்ரான்ஸ்பர் பிரத்தியேக கிளையுடன்...

2025-02-11 17:50:42
news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40