இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஓமானின் பாதுகாப்பு உயர்மட்டக் குழு, இலங்கை கடற்படையின் பிரதானிகளை கடற்படை தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஓமானின் 17 பேர் அடங்கிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளது.

இச் சந்திப்பில் இலங்கை கடற்படையின் பிரதி தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் நீல் ரொசாரியோவை ஓமானின் எயார் கொமடோர் நஷீர் ஜம்மு அல் சஜ்அலி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஓமானிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

குறிப்பாக இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர நலன்கள், பிரச்சினைகள் தொடர்பில்  இரு நாட்டு பிரதிநிதிகளுக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் ஓமான் நாட்டின் உயர் தரத்திலான இராணுவ அதிகாரிகள், விமானப்படை அதிகாரி, இலங்கைக்கான ஓமானின் தூதர் மோசா ஹம்டன் மோசா உட்பட பல இராஜதந்திரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.