யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த வருடத்தில் 776 பேர் பாதிப்பபு : 71 பேர் இறப்பு - வைத்திய கலாநிதி யமுனானந்தா

Published By: Digital Desk 7

09 Apr, 2024 | 09:37 AM
image

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும்.

புற்றுநோயைப் பொறுத்தவரையில் நிற மூர்த்தம் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் மற்றும் சமூகத்தில் வயதானவர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் போது புற்றுநோயின் தாக்கம் வேகமாக உணரப்படும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருபவர்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் சூலகப் புற்றுநோய், வாய் புற்றுநோய், சுவாசம் தொண்டை பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய், உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய் என பல வகையான புற்று நோய்கள் இனம் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தமட்டில் புற்று நோய்களை இனம் காணுவதற்கான  ஆய்வு கூட வசதிகள் காணப்படுகின்ற நிலையில் மேலதிக ஆய்வுகளுக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் தை மாதம் 60 பேரும் பெப்ரவரி மாதம் 49 பேரும் மார்ச் மாதம் 60 பேரும் ஏப்ரல் மாதம் 52 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

புற்றுநோயை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக மேற்கொள்ளும் போது நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முப்பது வயதிற்கு மேற்பட்ட  பெண்கள் தமது  மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதோடு ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும்.

40-60 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயை மார்பகங்களில் ஏற்படும் அசாதாரண நிலையை கண்டறியும் மனோ கிராம் சிகிச்சை மூலம் கண்டறியலாம். குறித்த சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்படுகிறது.

பெண்கள் மாதவிடாய் ஒழுங்கீனம் தொடர்பில் பெண்கள் அவதானமாக இருப்பதோடு கருப்பைக் கட்டி, சூலகப் புற்றுநோய் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஆண்களைப் பொறுத்தவரையில் புகைத்தல் வெற்றிலை போடுதலால் மற்றும் மதுபானம் அருந்துவதால் வாய்  மற்றும் ஈரல் புற்று நோய் ஏற்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில்  கடந்த 2023 ஆம் ஆண்டு  தை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்  07 பேர் இறந்துள்ளனர்.

இரைப்பை புற்று நோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளதுடன் ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் எட்டு பேர் இறந்துள்ளனர்.

சுவாசாப் புற்றுநோயினால் 67 பேர் பாதிக்கப்பட நிலையில் 08 பேர் இறந்துள்ளனர். மார்பகப் புற்று நோயினால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 04 பேர் இறந்துள்ளனர்.

கருப்பைப் புற்றுநோயினால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03  பேர் இறந்துள்ளனர். கருப்பை கழுத்து புற்று நோயினால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் இறந்துள்ளனர்.

மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பை புற்று நோயினால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயினால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார்.

ஆண்களில் முன்னாண் மற்றும் நரம்பியல் சார்ந்த புற்று நோய்களினால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் இறந்துள்ளனர்.

தைரொய்ட் சிறப்பு கழலையில் ஏற்பட்ட புற்றுநோயினால் 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையை பொருத்தவரையில் நரம்பியல் சார்ந்த பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பில் வைத்திய பரிசோதனைகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

உடலில் இயல்பு நிலைக்கு மாறாக ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் ஒவ்வொருவரும் கண்காணித்து வருவதோடு சந்தேகங்கள் இருந்தால் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமாகும்.

ஆகவே புற்றுநோய் தொடர்பில் ஆண், பெண் இருபாலரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாக காணப்படுவதுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07
news-image

சுருள் சிரை நரம்பு பாதிப்பிற்கு நிவாரணம்...

2024-05-14 20:55:21
news-image

உணவு குழாய் இயக்க பாதிப்பை துல்லியமாக...

2024-05-13 17:42:00
news-image

'கொரியா' தசை இயக்கப் பாதிப்பை கட்டுப்படுத்தும்...

2024-05-11 18:10:10