கண்டியை பசுமை நகரமாக மாற்றுவதற்கு உலக வங்கியிடம் யோசனை முன்வைக்கப்படும் - பந்துல குணவர்தன

Published By: Vishnu

09 Apr, 2024 | 12:07 AM
image

கண்டியை பசுமை நகரமாக மாற்றுவதற்கு உலக வங்கியிடம் யோசனை முன்வைக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வருடங்களில் பசுமை நகர யோசனையும்,   (The Green City concept) உத்தேச பல்வகை போக்குவரத்து மையமும்  (Multi Transport hub)  கொண்டு செல்லப்படும் என்றும்  அமைச்சர் கூறினார்.

கண்டி நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பல்வகை போக்குவரத்து நிலையத்தின் அபிவிருத்தியை அவதானித்தல் மற்றும் மீளாய்வு செய்வது தொடர்பாக கண்டி குட்ஷெட் வளாகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு, அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்;

மூவாயிரம்  கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ஊடக மையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாம் ஈடுபடவில்லையென்றாலும் கூடுதலாக விஸ்தரிக்கப்பட வேண்டிய பல வீதிகள் தொடர்பில் கலந்துரையாடியதாக  தெரிவித்துள்ள அமைச்சர் இத்திட்டத்தின் வெற்றிக்கு வீதி அபிவிருத்தி பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். 

கட்டுகஸ்தோட்டை, குண்டசாலை, பேராதனை, தென்னகும்புர உள்ளிட்ட பல கண்டியை அண்மித்துள்ள  புறநகர் பகுதிகளின் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாட பட்டதாகவும், அதற்காக இரண்டாயிரம்  கோடி ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள  அமைச்சர் குணவர்தன கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வது குறித்தும்  எதிர்காலத்தில் உலக வங்கியுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் கூறினார்.

கண்டியை பசுமை நகரமாக மாற்றும் வகையில் வளி  மாசுபடாத போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 200 மின்சார பஸ்கள் கண்டிக்கு வழங்கப்படவுள்ளதாக உலக வங்கிக்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர்  தெரிவித்தார்.

குட்ஷெட் வளாகத்தில்  இடம்பெற்ற இக் கலந்துரையாடலுக்காக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், ஜனாதிபதி அலுவலக சந்தைப்படுத்தல் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு பணிப்பாளர் சரத் ஹெவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் மகேந்திர விஜேபால, கண்டி மாநகர சபை. விஜேதிலக உள்ளிட்ட ஆணையாளர் இஷான்  ஆகியோர்கள் இக் குழுவில்  இணைந்து கொண்டனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23