இன்றைய சூழலில் எம்முடைய ஆன்மீகப் பெரியோர்கள் சூட்சுமமாக சக்திகளை கொண்டிருக்கும் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டால் உங்களுக்கான நல்ல பலன் கிடைப்பதுடன் மன நிறைவும், மன மகிழ்ச்சியும் கிடைக்கும் என குறிப்பிடுகிறார்கள்.
இன்றைய சூழலில் வாஸ்து தோஷம் என்பது எம்மில் பலரும் அறியாத விடயம். அதிலும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வாஸ்து தோஷம் என்பது பார்க்க இயலாத அல்லது பார்க்க முடியாத விடயம். வாடகைக்கு நாம் குடிபுகும் முன்னரே அடிப்படையான வாஸ்து குறைபாடுகள் இல்லாது இருக்கிறதா..? என்பதனை மட்டுமே துல்லியமாக அவதானிக்கிறோம்.
மேலும் வாடகை வீட்டில் குடி புகுந்து வாழ்க்கையை நடத்தும் போது கணபதி ஹோமம் போன்ற விடயங்களில் தீவிர அக்கறையும் காட்டுவதில்லை. மேலும் வாஸ்து தோஷமுள்ள வீட்டில் நீங்கள் வசிக்க நேர்ந்தால் உங்களுடைய திசா, புத்தி, கோச்சார ஜாதக நிலைப்பாடு ஆகியவை நன்றாக இருந்தாலும் வாஸ்து குறைபாடு காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் தேக்கமடையக்கூடும்.
அதே தருணத்தில் பித்ரு தோஷம் என்ற தோஷமும் இணைந்து கொண்டால் உங்களது முன்னேற்றம் என்பது கானல் நீராகிவிடும். இது போன்ற சூழலில் தவிப்பவர்களுக்கு எம்முடைய ஆன்மீகப் பெரியோர்கள் தமிழக நகரில் உள்ள திருச்சுழி என்னும் சிற்றூரில் அமைய பெற்றிருக்கும் திருமேனி நாதர் அல்லது பூமிநாதர் ஆலயத்திற்கு சென்று அங்கு சுயம்புவாய் அருள் பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து வந்தால் உங்களுக்கான வாஸ்து தோஷம் நீங்குவதுடன் பித்ரு தோஷமும் நீங்கி வளர்ச்சியை காண்பீர்கள் என குறிப்பிடுகிறார்கள்.
மேலும் இந்த ஆலயத்தில் மூலிகை பச்சிலைகளால் உருவாக்கப்பட்ட நடராஜப் பெருமானின் சிலை உள்ளது. இந்த சிலைக்கு உங்களின் குடும்ப ஜோதிடரின் அறிவுரைப்படி திகதி, திதி, கரணம், நாம யோகம் ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து நடராஜப் பெருமானுக்கு அபிஷேகமும், விசேட அலங்காரமும், ஆராதனையும் செய்தால் உங்களது பாவம் தொலையும். இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல 21 தலைமுறைகளாக உங்களுடன் தொடர்ந்து வரும் பாவங்கள் களையப்படும். மேலும் வாஸ்து தோஷமும் நீங்க பெற்று உங்களுக்கான சுப பலன்களை பெற தொடங்குவீர்கள்.
திருச்சுழியில் உள்ள சிவபெருமான் சுயம்புவாய் தோன்றி அருள் பாலிக்கிறார் என்பது விசேடம். இங்கு சனி பகவானுக்கு தனி சன்னதி இருப்பதாலும் ஏழரைச் சனி உள்ளிட்ட சனியின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இங்கு வந்து சனி பகவானை தரிசித்தால் உங்களுடைய சனி தோஷம் நீங்கும்.
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த ஊர் என்பதால் அவர் இந்த பூமிநாதர் ஆலயத்தில் சிறு பிராய காலகட்டத்திலேயே இறை பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதால் அவருடைய அருளாசிகளும் இந்த தலத்து இறைவனை தரிசிப்பதன் மூலம் கிடைக்கும்.
இங்குள்ள அம்பாள் சன்னதிக்கு பின்புறம் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் கணவன்- மனைவி ஒற்றுமை மற்றும் திருமண தடை ஆகியவை இருந்தால் இந்த தளத்து அம்பாளை வணங்குவதன் மூலம் நல்ல பலனை பெற இயலும். இதற்கான நெறிமுறைகளை இங்கு இறை ஊழியம் செய்யும் அன்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
காதல் திருமணம், பதிவு திருமணம், பெரியோர்களின் ஆசி இல்லாமல் நடைபெற்ற கந்தர்வ திருமணம், திருமணத்திற்கு முன்னரே உடலுறவு செய்து கொண்டதால் ஏற்பட்ட தோஷம், கலப்புத் திருமணம், பொருத்தம் மற்ற திகதிகளில் நடைபெற்ற திருமணம் போன்ற திருமணத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாத தம்பதிகள், குடும்ப ஜோதிடரின் அறிவுரைப்படி சரியான நாட்களில் இங்கு வந்து தம்பதி சமேதரராய் தரிசனம் செய்தால் திருமணம் தொடர்பான தோஷங்கள் நீங்க பெற்று கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கி இல்வாழ்க்கை இனிய பயனை வழங்க தொடங்கும். இத்தலத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் அதிகம்.
மகா சிவராத்திரி தினத்தன்று இங்குள்ள சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்தால் ஆயிரம் லிங்கங்களை வழிபட்ட புண்ணிய பலன் கிடைக்கும்.
இந்த தலத்திற்கு தாயகத்திலிருந்து மதுரைக்கு விமான மூலம் வருகை தந்து அதன் பிறகு விருதுநகர், அருப்புக்கோட்டை வழியாக சாலை மார்க்கமாகபயணித்து அருப்புக்கோட்டை எனும் நகரிலிருந்து 15 கிலோமீற்றரில் திருச்சுழி எனும் புண்ணிய பூமியை வந்தடையலாம். அங்கு சுயம்புவாக சிவபெருமானும் அருள் பாலிக்கிறார். அவரது ஆசியையும் பெறலாம். இங்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனை பெற்றுத் தருகிறது.
தொகுப்பு :சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM