தயாரிப்பு : பூம்பாறை முருகன் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : 'கயல்' ஆனந்தி, ஆர். கே. சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித், சசிலயா, பேபி நட்சத்திரா மற்றும் பலர்.
இயக்கம் : கே. ராஜசேகர்
மதிப்பீடு : 2/5
தொடர் கொலைகளை செய்யும் கொலைகாரன் ஒருவனை காவல்துறை அதிகாரிகள் என்கவுண்டர் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது தவறுதலாக பொதுமக்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகிறார். அவரின் குடும்பம் என்ன ஆனது? அந்த குடும்பத்தினருக்கு காவல்துறையினர் எம்மாதிரியான உதவிகளை செய்தனர்? என்பது போன்ற சில உண்மைச் சம்பவங்களை தழுவி, 'வைட் ரோஸ்' எனும் பெயரில் திரில்லர் ஜேனரிலான திரைப்படத்தை இயக்குநர் கே. ராஜசேகர் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
'கயல்' ஆனந்தியின் கணவர் விஜித் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வருகிறார். அவர் தனது குழந்தையான பேபி நட்சத்திரா மற்றும் மனைவி 'கயல்' ஆனந்தியுடன் அவரது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவதற்காக வெளியே புறப்படுகிறார்.
பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடிவிட்டு வீட்டிற்கு திரும்பும் தருணத்தில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பை வெளியிடாமல் தடுப்பு ஒன்றினை வைத்து விட்டு என்கவுண்டர் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதன் போது எதிர்பாராத விதமாக காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு விஜித் பலியாகிறார். வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் திடீரென்று இறந்து விட என்ன செய்வது என தெரியாமல் திகைக்கிறார் ஆனந்தி. கணவரின் இழப்பு வீட்டு வாடகையை கட்ட முடியாமலும், குழந்தைக்கு உணவு வாங்கித் தருவதற்கு கூட கையில் காசு இல்லாமலும் ஆனந்தி தவிக்கிறார்.
இந்நிலையில் வட்டி கட்ட இயலாததால் ஆனந்தியின் மகளை கந்துவட்டிக்காரர் கடத்திச் சென்று விடுகிறார். இந்த நிலையில் அவருடைய தோழியின் வழிகாட்டுதலால் வேறு வழி இல்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார். அவருடைய முதல் அனுபவமே மறக்க முடியாத அனுபவமாக மாறிவிடுகிறது.
அவர் பாலியல் தொழிலாளிகளை வரவழைத்து கொலை செய்யும் ஆர்.கே சுரேஷிடம் சிக்குகிறார். ஆர்.கே. சுரேஷிடமிருந்து அவர் காவல்துறையின் உதவியின் மூலம் தப்பினாரா? இல்லையா? என்பதும், தொடர் கொலைகளை செய்யும் ஆர் கே சுரேஷ் யார்? அவரது பின்னணி என்ன? என்பதும், கடத்தப்பட்ட கயல் ஆனந்தியின் மகளின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் கதை.
கதையாக கேட்கும் போது விறுவிறுப்பாகவும் சுவராசியம் குறையாமலும் இருக்கும் இந்த திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் பலவீனமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பார்வையாளர்கள் யூகிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வருவதால் தொய்வை தருகிறது.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி நவரச பாவனைகளை நடிப்பில் வெளிப்படுத்தி ரசிகர்களை எளிதாக கவர்கிறார்.
சைக்கோ குற்றவாளியாக நடித்திருக்கும் ஆர் கே சுரேஷ் வசனம் பேசாமல் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார். இளம் வயது ஆர்கே சுரேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்.
கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் நடிகர் விஜித் குறைவான நேரத்தில் மட்டுமே திரையில் தோன்றினாலும் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கும் நடிகர் ரூசோ ஸ்ரீதரன்- தனது கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பாடல்களை விட பின்னணி இசை சில இடங்களில் மிரட்டுகிறது. இரவு நேர ஒளிப்பதிவு ஒளிப்பாதிவாளரின் பங்களிப்பை பறைசாற்றுகிறது.
படத்தில் சில இடங்களில் மட்டுமே சைக்கோ கிரைம் திரில்லர் ஜேனருக்கான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது படத்தின் சுவாரசியமான அம்சம்.
பிணவறை தொடர்பான குற்றங்கள் பொதுவெளியில் விவாதிக்க பட வேண்டும் என்பதற்காக முயற்சித்திருக்கும் இயக்குநரின் முயற்சியை பாராட்டலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM