களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேக நபரை செல்லக் கதிர்காமம் பகுதியில் வைத்து  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள உலகக் குழு நபரான சமயங், சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உட்பட ஏழு பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.