ஹங்குராங்கெத்தவில் பஸ் கவிழ்ந்து விபத்து ; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 3

08 Apr, 2024 | 04:35 PM
image

நுவரெலியா மாவட்டத்திலுள்ள  ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தோட்டை லூல்கந்தூர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7)  இரவு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹங்குராங்கெத்த பகுதியில் இருந்து தெல்தோட்டை வரை (காமன்ட்) ஆடைதொழிற்சாலையில் தொழில் புரியும் பெண்களை ஏற்றி செல்லும் தனியார் பஸ் நேற்றைய தினம் இரவு நூல்கந்தூர பகுதியில் பாலத்தில் இருந்து விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

பஸ்ஸில் பயணித்த இரு பெண்களும் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகி தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரு பெண்கள் நேற்று இரவு பேராதெனிய வைத்தியசாலைக்கு இடம் மாற்றம் செய்துள்ளனர்.

பஸ்ஸில் பயணித்த பெண்கள் கூறியதாவது, சாரதி தொடர்ந்து தொலைபேசி மூலமாக பேசிகொண்டு வந்த காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பஸ்ஸில் பயணித்த பெண்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:17:50
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25
news-image

பெண் ஊழியரின் துரித நடவடிக்கையால் பாரிய...

2024-06-15 21:49:57