யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை திருடிச் சென்றவரை பொலிஸார் மடக்கிப்பிடிக்க முற்பட்டவேளை, சந்தேகநபர் வீதியில் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு, அதில் தப்பி சென்றுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு , மருத்துவ மனைக்கு சென்று திரும்பிய வேளை தனது முச்சக்கர வண்டி களவாடப்பட்டதை அறிந்து அது தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டை அடுத்து யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
களவாடப்பட்ட முச்சக்கர வண்டி யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்பாக பயணித்த போது , அதனை அப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் கண்ணுற்று , முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.
அவ்வேளை முச்சக்கர வண்டியை திருடிக்கொண்டு சென்றவர் , அதனை வீதியில் கைவிட்டு , தப்பியோடி , வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு அதில் தப்பியோடியுள்ளார்.
முச்சக்கர வண்டியை மீட்ட பொலிஸார் , தப்பி சென்றவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவனிடமும் துவிச்சக்கர வண்டி பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலத்தை பொலிஸார் பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM