(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இன்று  இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில்  பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் இந்தியாவின் பா.ம.க.வின் இளைஞர் அணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ் இன்று  ஜெனிவா வந்தடைந்தார்.  

அத்துடன்  இன்றைய தினம் நடைபெற்ற பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலங்கை தொடர்பான   விசேட உப குழுக்கூட்டத்தில்  அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார்.  

எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஜெனிவாவில் தங்கியிருக்கும் அன்புமணி ராமதாஸ்  இலங்கை தொடர்பான பல்வேறு விசேட உப குழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதை  வலியுறுத்தவுள்ளார்.