ஸ்ரீபாத நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய வருடாந்த திருவிழாவின் போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 100 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் பலர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (7) வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட பின் இவர்கள் அனைவரும் மயக்க நிலைக்குள்ளானதாகவும் இதனையடுத்து இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் 40 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த மஸ்கெலியா பிரதேச வைத்திய நிர்வாகம் இவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM