ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்

இலங்கை தொடர்பான பிரேரணை வியாழக்கிழமை  ஜெனிவாவில் நிறைவேறிவிடும். எனவே அந்த பிரேரணையில் தற்போது பாரிய மாற்றங்களை செய்யமுடியாது. சில வேளை அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்  விரும்பினால் பாரிய மாற்றத்தை செய்யலாம் அல்லது பிரேரணையை கொண்டுவராமல் கூட செய்யலாம் என்று பிரான்ஸ் மனித உரிமை  மையத்தின் இயக்குனர் ச.வி கிருபாகரன்  தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள கிருபாகரன் இன்று வீரகேசரி இணையதளத்திற்கு அளித்த செவ்வியிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.