ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளை வழங்குவதில் முன்னோடியான Certis Lanka, நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது பயணத்தில் முக்கியமானதொரு சாதனையாக SITREK Group என்ற தனது புதிய வர்த்தகநாம அடையாளத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விமரிசையான நிகழ்வொன்று புகழ்மிக்க கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றதுடன், மதிப்பிற்குரிய விருந்தினர்கள், தொடர்புபட்ட பல்வேறு தரப்பினர், ஊடகவியலாளர்கள் இதில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
SITREK Group என்ற பெயர் மாற்றமானது கட்டமைப்பு, ஒருமைப்பாடு, நம்பிக்கை, பொறுப்புணர்வு, மகத்துவம் மற்றும் அறிவு ஆகிய தனது பிரதான விழுமியங்களில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில் இந்த மூலோபாய நகர்வு அமைந்துள்ளது.
இந்த விழுமியங்கள் அனைத்தும் நிறுவனத்தின் பிரதான தூண்களாக காணப்படுவதுடன், முழுமையான இலங்கை நிறுவனமாக மாறுவதை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கின்ற அதேசமயம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சும் வகையில் இயங்குவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.
SITREK Group இன் குழும இணை முகாமைத்துவப் பணிப்பாளர் மினோலி விஜேசிங்க நிகழ்வில் உரையாற்றுகையில்,
“SITREK Group என மாற்றம் காண்பது நிறுவனத்திற்கு பாரிய வாய்ப்பினை ஏற்படுத்துவதுடன், எதிர்கால விஸ்தரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு இடமளித்து, எமது வாடிக்கையாளர்களுக்கு இன்றும் வினைதிறனுடனும், செயல்திறனுடனும் சேவைகளை வழங்குவதற்கு எம்மை மேம்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
கடந்தகாலங்களில் ஓயாத ஆதரவை வழங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு தனது நன்றிக்கடனை வெளிப்படுத்திய அவர், மகத்துவத்தின் மீது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் மீள வலியுறுத்தினார்.
SITREK Group இன் குழும இணை முகாமைத்துவ பணிப்பாளர் ஜீவக விஜேசிங்க அவர்கள் இந்த மீள்வர்த்தகநாமமிடலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில், “எமது புதிய வர்த்தகநாம அடையாளமான SITREK என்பது எமது பயணத்தில் எம்மை வழிநடத்தியுள்ள அடிப்படைக் கோட்பாடுகளை அடியொற்றியதாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
வழங்குகின்ற சேவைகளை மேம்படுத்துவதற்காக பயிற்சி, மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீது முதலீடு செய்வதில் குழுமம் கவனம் செலுத்தியுள்ளதாக வலியுறுத்திய அவர், தொழிற்துறையில் தரஒப்பீட்டு நியமங்களை தோற்றுவிப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்தினார்.
SITREK Group இன் துணை நிறுவனங்களான SITREK Security Solutions, SITREK Technologies, SITREK Secure Logistics, SITREK Home Nursing and Swift Care மற்றும் SITREK Courier Services போன்றவை முறையே தத்தமது துறைகளில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு SITREK Security Solutions ஐ எடுத்துக்கொண்டால், ஆள்வலு பாதுகாப்பு சேவைகளில் சந்தையில் முன்னிலை வகித்து வருவதுடன், நேர்த்தியான வரலாற்றையும், அதிநவீன தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.
SITREK Secure Logistics ஐ எடுத்துக்கொண்டால், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் உயர் மட்ட சேவைகளினூடாக சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது.
மேலும், புத்தாக்கம் மற்றும் பல்துறை விரிவாக்கம் ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பு, SITREK Group பல் துறைகளில் காலடியெடுத்து வைத்து வருவதன் மூலமாக தெளிவாக புலப்படுகின்றது. குறிப்பிடத்தக்க வகையில், குளிரூட்டி பொருத்துதல் மற்றும் பேணற்சேவைகள், ஆதனங்களை வாடகைக்கு விடுதல் மற்றும் கொள்வனவு சேவைகள், கற்றுக்கொள்வதில் பேரார்வம் கொண்டவர்களுக்காக ஆட்களைக் கவனித்தல் மற்றும் ஏனைய நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கும் Identity College of Higher Education (ICHE) கற்கைமையம் போன்ற முயற்சிகளினூடாக கல்வி போன்ற துறைகளில் தனது முயற்சிகளை இக்குழுமம் மேற்கொண்டு வருகின்றது.
SITREK Group இன் மாற்றமானது வெறுமனே பெயர் மாற்றம் மாத்திரம் அல்ல, மாறாக புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியை உள்வாங்கும் அதேசமயம், ஒப்பற்ற பாதுகாப்பு தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துகின்றது.
ஜீவக விஜேசிங்க, குழும இணை முகாமைத்துவப் பணிப்பாளர், Sitrek Group, கலந்துகொண்டோர் மத்தியில் உரையாற்றும் காட்சி
மினோலி விஜேசிங்க, குழும இணை முகாமைத்துவப் பணிப்பாளர், Sitrek Group, கலந்துகொண்டோர் மத்தியில் உரையாற்றும் காட்சி
மேஜர் ஆனந்த ரொட்றிகோ, RSP, குழும பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, Sitrek Group, நன்றியுரையை நிகழ்த்தும் காட்சி
SITREK Group தொடர்பான விபரங்கள்:
மகத்துவம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மீதான ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அயராத கவனத்துடன், ஒருங்கிணைந்த பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் பன்முகப்பட்ட சேவைகளை வழங்குவதில் ஒரு முன்னணி வலுமையமாக SITREK Group காணப்படுகின்றது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலான செழுமையான வரலாற்றுடன், Certis Lanka என்ற தனது ஆணிவேரிலிருந்து பெரும் வளர்ச்சி கண்டுள்ள SITREK Group, வணிகங்களும், மக்களும் பெரும் நம்பிக்கை வைத்துள்ள, தொழில்துறையின் முன்னணி நாமமாக மாறியுள்ளது.
கட்டமைப்பு, ஒருமைப்பாடு, நம்பிக்கை, பொறுப்புணர்வு, மகத்துவம் மற்றும் அறிவு ஆகிய அதன் பிரதான விழுமியங்கள் மீது அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்ற SITREK Group ஆனது SITREK Security Solutions, SITREK Technologies, SITREK Secure Logistics, SITREK Home Nursing and Swift Care, மற்றும் SITREK Courier Services ஆகியவை உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களினூடாக விரிவான சேவைகளை வழங்கி வருகின்றது. அதிநவீன பாதுகாப்பு தீர்வுகள் முதல் பிரத்தியேகமான கவனிப்பு சேவைகள் வரை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சி, பாதுகாப்பு மற்றும் சேவைகள் துறையில் வளர்ச்சி முன்னெடுத்துச் செல்வதில் SITREK Group தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM