(ஆர்.சேதுராமன்)
மகளிர் டென்னிஸ் சங்கத்தின் வருட இறுதி சுற்றுப்போட்டி (டபிள்யூ.ரி.ஏ. பைனல்ஸ்) சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
2024 முதல் 2026 வரையான 3 வருடங்களும் சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இச்சுற்றுப்போட்டி நடைபெறும் என தொழிற்சார் மகளிர் டென்னிஸ் சுற்றுப்போட்டிகளை நிர்வகிக்கும் உலகளாவிய அமைப்பான மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூ.ரி.ஏ.) அறிவித்துள்ளது.
இவ்வருட போட்டிகள் நவம்பர் 2 முதல் 9 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் இப்போட்டிகளில் 15.25 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருட பரிசு தொகையைவிட 70 சதவீதம் அதிகமாகும்.
சவூதி அரேபியாவில் நடைபெறும் மிகப் பெரிய டென்னிஸ் சுற்றுப்போட்டி இதுவாகும்.
4 கிராண்ட்ஸ்லாம் சுற்றுப்போட்டிகளுக்கு அடுத்ததாக மகளிர் டென்னிஸில் அதிக பரிசுப் பணம் மற்றும் அதிக புள்ளிகள் வழங்கப்படும் முக்கிய சுற்றுப்போட்டியாக மகளிர் டென்னிஸ் சங்கத்தின் வருட இறுதி சுற்றுப்போட்டி (டபிள்யூ.ரி.ஏ. பைனல்ஸ்) விளங்குகிறது.
குறித்த வருடத்தில் நடைபெற்ற போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் உலகின் முன்னிலையிலுள்ள 8 ஒற்றையர் போட்டியாளர்களும் 8 இரட்டையர் ஜோடியினரும் இப்போட்டிகளில் பங்குபற்றுவர்.
கடந்த வருடம் மெக்ஸிகோவில் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை ஈகா ஸ்வியாடெக் சம்பியனானார்.
கடந்த வருடம் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நெக்ஸ்ட் ஜென் ஏ.ரி.பி. டென்னிஸ் சுற்றுப்போட்டியை சவூதி அரேபியா நடத்தியிருந்தது. அதுவே அந்நாட்டில் நடைபெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச டென்னிஸ் சுற்றுப்போட்டியாகும்.
கடந்த டிசெம்பர் மாதம் பெண்களுக்கான கண்காட்சிப் சுற்றுப்போட்டியொன்று சவூதியில் நடைபெற்றது. முன்னிலை வீராங்கனைகளான அரினா சபலென்கா, ஒன்ஸ் ஜபேர் ஆகியோருக்கிடையிலான போட்டியும் இவற்றில் அடங்கும்.
மகளிர் டென்னிஸ் போட்டிகளை நடத்துவது குறித்து சிரேஷ்ட டென்னிஸ் வீராங்கனைகளான மார்ட்டினா நவரத்திலாவா, கிறிஸ் எவர்ட் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
"சவூதி அரேபியாவினால் சுரண்டப்படுவதற்காக பெண்கள் டென்னிஸை நாம் கட்டியெழுப்பவில்லை" என அவர்கள் கூறினர்.
இக்கருத்து தொடர்பில் கிறிஸ் எவர்ட், நவரத்திலோவா ஆகியோரை அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதுவர் இளவரசி ரீமா பிந்த் பாந்தர் அல் சௌத் மற்றும் டுனீஷிய வீராங்கனை ஒன்ஸ் ஜபேர் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
மனித உரிமை மீறல்கள், பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றை மறைப்பதற்கு விளையாட்டுத்துறையை சவூதி அரேபியா பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஆனால், "போட்டிகளை நடத்துவதற்கு றியாத் நகரை தெரிவு செய்ததன் மூலம், அப்பிராந்தியத்தில் இடம்பெறும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு எமது ஆதரவை தெரிவிக்கிறோம்" என மகளிர் டென்னிஸ் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் சைமன் கூறியுள்ளார்.
"மகளிர் டென்னிஸ் சங்கத்தின் வருட இறுதி சுற்றுப்போட்டியானது விளையாட்டுக்கு அப்பாலும், குறிப்பாக எமது சிறுமிகள், பெண்களுக்கு உந்துதலை ஏற்படுத்தும் சக்தியைக் கொண்டது.
இந்தளவிலான மகளிர் சுற்றுப்போட்டியொன்றை நடத்துவது சவூதி அரேபியாவில் டென்னிஸ் துறைக்கு ஒரு தீர்க்கமான தருணமாகும்' என சவூதி அரேபிய விளையாட்டுத்துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஸீஸ் பின் துர்கி அல் பையால் அல் சௌத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM