உலக சுகாதார ஸ்தாபனமானது 1948ஆம் ஆண்டு சித்திரை மாதம் 7ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. அந்த நாளே உலக ஆரோக்கிய தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
உலக ஆரோக்கிய தினமானது இவ்வருடம் 2024ஆம் ஆண்டுக்குரிய தொனிப்பொருள் யாதெனில் "எனது ஆரோக்கியம்; எனது உரிமை” (My Health; My Rights) என்பதாகும். அதாவது எனது ஆரோக்கியத்தை பேணுவதில் எனக்கு உரிமை உள்ளது என்பதாகும்.
உலகின் மூலை முடுக்கெங்கிலும் நோய்கள் மற்றும் அனர்த்தங்கள் இறப்புக்களையும் ஊனங்களையும் ஏற்படுத்திவருகின்றன. ஆகவேதான், இவ்வருடத்துக்கான இந்த தொனிப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில், உலகின் எந்தப் பாகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சிறந்த, தரமான சுகாதார சேவை, கல்வி, தகவல், தகுந்த குடிநீர், சுத்தமான காற்று, சிறந்த போசாக்கு உணவு, சிறந்த கட்டமைப்புடனான வீடு, இனப்பாகுபாடு இல்லாத சுதந்திரம் ஆகிய எல்லாவற்றையும் உரிமையுடன் தாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே உருக்கமாக எதிர்பாக்கப்படுகிறது.
இந்த வகையான உரிமைகளை மனிதருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், முதலில் நாடுகளில் உள்ள சுகாதாரத் திட்டங்கள் பலமுடையதாய் இருக்க வேண்டும் மற்றும் சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்கப்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். இந்த விடயத்தையே இம்முறை உலக ஆரோக்கிய தினத்தின் தொனிப்பொருள் வலியுறுத்துகிறது.
இந்த வருடத்துக்கான தொனிப்பொருளை அமுல்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.
1. பலதரப்பட்ட சுகாதார சவால்களிலிருந்து எனது ஆரோக்கியத்தை பேணிக்கொள்ள தேவையான அறிவை தகுந்த ஊடகங்களினூடாக பெற்றுக்கொள்ள வேண்டும். (உ-ம் : உலக சுகாதார ஸ்தாபன வலையமைப்பு)
2. இந்த விழிப்புணர்வை எமது குடும்பம், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
3. சுகாதார அமைப்புக்களுடன் சேர்ந்து நாமும் இயங்குவதன் மூலம் எமது ஆரோக்கியத்தை தக்கவைத்துக்கொள்ள தேவையான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.
4. எமது ஆரோக்கியத்துக்கு நாமே பொறுப்பாளியாகுதல். அதாவது எமது உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை நடைமுறைகள் சார்பாக ஆரோக்கிய தெரிவுகளை கையாள்வதுடன், கிரமப்படியான வைத்திய பரிசோதனை மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள தவறக்கூடாது.
மேற்கூறிய விடயங்களை சமகால சுகாதார சவால்களுடன் தொடர்புபடுத்த முடியும். சமகால சுகாதார பிரச்சினைகளாக கீழ்வருவனவற்றை கொள்ளலாம்.
1. கொவிட்-19இல் இருந்து மீண்டுவரல் :- கொவிட் 19க்கு எதிரான தடுப்பூசி பாவனை வந்திருந்தாலும் தொற்றுநோயின் பின்னரான பாதிப்புக்களிலிருந்து வெளிவர முடியாமல் உள்ளமை.
2. உள சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு :- யாவரும் உள ஆரோக்கியத்தை பேணிக்கொள்ள தகுந்த ஆதரவு கிடைக்க வேண்டும்.
3. தொற்றாநோயிலிருந்து தப்பித்துக்கொள்ளல்:- சலரோகம், இதயம் சார் நோய்கள் மற்றும் புற்றுநோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வாழ்க்கை நடைமுறையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு எமது நாட்டில் பின்பற்றப்படும் சுகாதார விதிமுறைகளையும், ஆலோசனைகளையும் மதிக்க தலைப்படவேண்டும்.
- யாழ் ஆரோக்கிய நகரத் திட்டம்,
உலக சுகாதார ஸ்தாபனம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM