(ந.ஜெகதீஸ்)

இந்த வருடத்துக்குள் மூன்று மகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கட்டாயம் இடம்பெறும். தேர்தல் குறித்து அரசாங்கத்துக்கு எவ்வித அச்சமும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சில் மகாணங்களுக்கான மீனவ அமைப்புகளுக்கான சம்மேளத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்துக்கு தேர்தல்கள் மீதான அச்சத்தின் காரணமாகவே குறித்த தேர்தல்களில் அரசாங்கம் காலதாமதத்தை ஏற்படுத்துவதாக முன்வைக்கப்படும் பலரது விமர்சனங்கள் அரத்தமற்றது. உள்ளுராட்சி  மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளே குறித்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களினது காலதாமதமாகும். தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கத்துக்கு எவ்வித அச்சமும் இல்லை. இந்த வருடத்துக்குள் மூன்று மகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை கட்டாயம் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றார்.