கல்முனை அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅஹ் உலமா சபை ஏற்பாடு செய்த மர்ஹூம்களான உலமாக்களை நினைவுகூரலும், வருடாந்த இப்தார் வைபவமும் உலமா சபை தலைவர் மௌலவி ரி.எம்.ஏ. ஜலீல் (பாஹவி) தலைமையில் கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் சனிக்கிழமை (06) நடைபெற்றது.
கல்முனை அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅஹ் உலமா சபை செயலாளர் மௌலவி ஏ.எல்.எம். நாஸரின் (மன்பயீ) நெறிப்படுத்தலில் காலமான உலமாக்களுக்கான நினைவுரைவும், துஆ பிரார்த்தனையும், மார்க்க சொற்பொழிவும் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது மசூர் தங்கள், மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது ஹிபத்துல்லாஹ் தங்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. ஜவாத், கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், மதரஸாக்கள் மற்றும் கலாபீடங்களின் பிரதானிகள், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM