பொகவந்தலாவ தேயிலை தொழிற்சாலை காட்டுப்பகுதியில்  உருகுழைந்த நிலையில் ஆணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை மேல் பிரிவைச்சேர்ந்த 43 வயதுடைய முனியான்டி சங்கர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கடந்த பத்து நாட்களாக காணவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை தேயிலை தொழிற்சாலையை அருகிலுள்ள  புல் காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவாகவும், இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் வலிப்பு நோயில் பாதிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்ததுடன், மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.