வறட்சி நிவாரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு 8 தண்ணிர் பவுசர்களை இந்திய அரசாங்கம் வழங்கி வைத்துள்ளது.

இந்நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 8 தண்ணீர் பவுசர்களினையும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரின் விஜயத்தின்போது 8 தண்ணீர் பவுசர்கள் மற்றும் 100 மெற்றிக் தொன் அரிசி ஆகியன இந்திய அரசால் இலங்கைக்கு நிவாரணமாக வழங்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த 8 தண்ணீர் பவுசர்களும் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.