நிந்தவூரில் பஸ் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; முதியவர் பலி

Published By: Digital Desk 3

06 Apr, 2024 | 04:29 PM
image

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பஸ்வண்டி மோட்டர்சைக்கிளில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளதோடு,  பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர்  5 ம் பிரிவைச் சேர்ந்த 72 வயதுடைய அகமட் லெப்பை மீராலெப்பை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் மாட்டுபாளையம் சந்திக்கு அருகில் இன்று பகல் 11.30 மணியளவில்  பொத்துவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டி  மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற வயோதிர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29