யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கைக்குண்டு, ஒரு கத்தி மற்றும் இரு வாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த சட்டவிரோத குழுவான ஆவா குழுவுடன் கொட்டாஞ்சேனையில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ள இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.