மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு அரசியல் நலனை அடைந்து கொள்வதற்கான ஆயுதமாக இருக்கலாம் - அலன்கீனன் 

06 Apr, 2024 | 11:23 AM
image

(நா.தனுஜா)

இன அடிப்படையிலான பிளவுகள் அரசியலுடன் தொடர்புடைய அதிகாரத்தையும், நலன்களையும் அடைந்துகொள்வதற்கான ஆயுதமாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், இவ்விவகாரத்தின் பின்னணியில் இருக்கக்கூடிய பொருளாதார முனைப்புக்களை அறிக்கையிடுவது மிகவும் ஆபத்தானது என்பதனால் நாம் முதலாவது மட்டத்தில் இடம்பெறும் அநீதியை மாத்திரமே கவனத்திற்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரத்தின் பின்னணியில் இருக்கக்கூடிய 'பொருளாதார ரீதியிலான முனைப்புக்கள்' தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், அதனை அறிக்கையிடுவது மிக ஆபத்தானது என்பதனால் முதலாவது மட்டத்தில் இடம்பெறும் அரசியல் ரீதியிலான அநீதி குறித்தே அனைவரும் அவதானம் செலுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகிக் கடந்த முதலாம் திகதியுடன் 200 நாட்கள் பூர்த்தியடைந்திருக்கின்றன.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக அத்துமீறலில் ஈடுபட்டுவருகின்ற போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பண்ணையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரம் தொடர்பான அறிக்கையிடல்களில் இக்காணி சுவீகரிப்பின் பின்னால் இருக்கக்கூடிய பொருளாதார ரீதியிலான முனைப்புக்கள் (நோக்கம்) தொடர்பில் மிக அரிதாகவே ஆராயப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இன அடிப்படையிலான பிளவுகள் அரசியலுடன் தொடர்புடைய அதிகாரத்தையும், நலன்களையும் அடைந்துகொள்வதற்கான ஆயுதமாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும் இவ்விவகாரத்தின் பின்னணியில் இருக்கக்கூடிய பொருளாதார முனைப்புக்களை அறிக்கையிடுவது மிகவும் ஆபத்தானது என்பதனால் நாம் முதலாவது மட்டத்தில் இடம்பெறும் அநீதியை மாத்திரமே கவனத்திற்கொள்கின்றோம் என விசனம் வெளியிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41